பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணையும் அஸ்வின் குமார்
பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து அஸ்வின் பாடல் ஒன்றுக்கு நடனமாடவிருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழினால் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
என்ன சொல்ல போகிறாய் பட அறிமுக விழாவில் 40 கதைகளைக் கேட்டு தூங்கியதாக அவர் பேச பெரும் சர்ச்சை வெடித்தது. முதல் படம் வெளியாவதற்கு முன்பே தலைகனமாக பேசுதாக அவருக்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க | காதலர் தினம்: 'ராஜா ராணி' பட தேவாலயத்திற்கு மனைவியுடன் சென்ற இயக்குநர் அட்லி
Advertisement
Advertisement
அந்தப் படமும் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இதனையடுத்து தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனி பாடல் ஒன்றுக்கு அஸ்வின் நடனமாடவிருக்கிறார். சுகர் பேபி என்ற இந்தப் பாடலுக்கு ஓஷோ வெங்கட் இசையமைக்கிறார். ஏ.பா.ராஜா இந்தப் பாடலை எழுதியுள்ளார். சாண்டி இந்தப் பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.
அஸ்வின் குமாரின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். லஸ்லியா மற்றும் அஸ்வின் இணைந்து விளம்பரப் படமொன்றில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.