சுந்தர்.சியின் 'தலைநகரம் 2' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இதோ
சுந்தர்.சி நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
இயக்குநர் சுந்தர்.சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | பொங்கல் வைக்கும் சூர்யா - ஜோதிகா: ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து
Advertisement
Advertisement
முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைநகரம் படத்தில் ரைட் என்ற வேடத்தில் சுந்தர்.சி நடித்திருந்தார். இதனை நினைவுபடுத்தும் விதமாக ரைட் ஸ் பேக் என்ற வாசகம் முதல் பார்வை போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.