எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘கடமையை செய்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.
அவற்றில் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கடமையை செய் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாசிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சேஷு, வின்செட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வருகிற ஜுன் 24 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.