முகப்பு
செய்திகள்

''நன்றி தம்பி'': சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்த விமல்

விலங்கு தொடர் மீதான சிவகார்த்திகேயனின் விமர்சனத்துக்கு நடிகர் விமல் நன்றி தெரிவித்துள்ளார். 

Updated On : 8 மார்ச் 2022, 1:42 pm IST
பகிர்:

நடிகர் விமல் நடித்துள்ள விலங்கு இணையத் தொடர் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தத் தொடர் ஜி5 ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் விலங்கு தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், விலங்கு இணைய தொடரைப் பார்த்தேன். நடிப்பு, உருவாக்கம், எழுத்து, இசை என அனைத்தும் நன்றாக உள்ளது. நடிகர் விமல், இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ், இசையமைப்பாளர் அஜிஷ், தயாரிப்பாளர் மதன், ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார் புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். நடிகர் பால சரவணன் மற்றும் ரவி ஆகியோர் ஒட்டுமொத்தமாக சிறப்பு செய்துள்ளனர் என பாராட்டு தெரிவித்துள்ளார். 

அவருக்கு நடிகர் விமல், நன்றி தம்பி என பதிலளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, ''விலங்கு படத்தை இப்பொழுதுதான் பார்த்தேன்.  தயாரிப்பாளர் மதன், சகோதரர் விமல், சகோதரர் பிரசாந்த் ஆகியோருக்கு வாழ்த்துகள். காணத்தவறாதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ''நன்றி அண்ணா'' என விமல் பதிலளித்துள்ளார். 

நடிகர் விமலுக்கு 'விலங்கு' தொடர் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனையடுத்து நடிகர் விமல் நடிக்கும் படங்களுக்கு திரையுலகில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments