ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை!
ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் குழந்தையின் உருவத்தை கணினி பரிசோதனையில் கணவர் ரன்வீர் கபூருடன் சேர்ந்து பார்க்குமாறு ஒரு புகைப் படத்தினை பதிவு செய்து, “எங்கள் குழந்தை... விரைவில் வரவிருக்கிறது...” என ஜுன் மாதம் பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று ஆலியா பட் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராக எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.