இளமையாக தெரிய அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை: ராதிகா ஆப்தே
தங்களை இளமையாகவும் கவர்ச்சியாகவும் காட்டிக்கொள்ள பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களென நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் தமிழை விட அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே நடித்த ஹிந்தி படமான ‘மோனிகா ஓ மை டார்லிங்’ நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தேவிடம் வாயது காரணமாக புறக்கணிப்பை கண்டதுண்டா என்று கேட்டதற்கு, “பாலிவுட்டில் இளமையான கதாநாயகிகளையே மிகப்பெரிய வணிக படங்களுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள். வயது முக்கிய காரணமாக இருக்கிறது. வயதினை காரணம் காட்டி என்னையும் தேர்வு செய்யாமல் ஒதுக்கி இருக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற காலங்கள் போய்விட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. அதிகமான பேர் இப்போது அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. முகம், உடலின் பாகங்களுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிறது. இதற்கு எதிராக பல பெண்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
பிரபலமான விளம்பரங்கள் தற்போது எல்லா வயதினருக்கும் வாய்பளிக்கிறது. ஒரு காலத்தில் இதற்காக அதிகமாகவே பாதிக்கப்பட்டேன். காலம்தான் அதையெல்லாம் சரிசெய்தது. ஆனால் இன்னமும் வயது காரணமாக இப்படி வாய்ப்பில்லாமல் தொடரும் அவலம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது” என கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.