முகப்பு
செய்திகள்

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Updated On : 18 நவம்பர் 2022, 6:11 pm IST
பகிர்:

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன்,  அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments