சிம்புவின் ‘பத்து தல’ வெளியீடு எப்போது?
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைபடத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைபடத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
Advertisement
Advertisement
கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதையும் படிக்க | நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதி
இந்தப் படத்தின் முழுப் பணிகளும் விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சில காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.