முகப்பு
செய்திகள்

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு!

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக பிரபல நடிகர் ஜி.எம். சுந்தர் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 நவம்பர் 2022, 12:46 pm IST
பகிர்:

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக பிரபல நடிகர் ஜி.எம். சுந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், துணிவு படத்தின் டப்பிங் பணிகள் இனிதே முடிவடைந்ததாக நடிகர் ஜி.எம். சுந்தர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துணிவு படம் குறித்த தொடர்ச்சியான அப்டேட் வந்து கொண்டிருப்பதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.