FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘வாழும் வரலாறு’: அமிதாப் பச்சனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 பிப்ரவரி 2024, 4:02 pm IST
பகிர்:

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

‘எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமாம் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்தியத் திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments