'ஹாரி பாட்டர்' பட நடிகர் காலமானார்
ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகர் ராபி கால்ட்ரேன்(72) காலமானார்.
ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கால்ட்ரேன்(72) இன்று காலமானார்.
நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' திரைப்படம் இதுவரை 8 பாகங்களாக வெளிவந்துள்ளன. உலக அளவில் இன்றும் இந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் 'ஹஹ்ரிட்' கதாபாத்திரத்தில் நடித்த ராபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.
Advertisement
Advertisement
72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரேன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.