வசூலில் தீபாவளி வெளியீடுகளை ஓரம்கட்டிய 'பொன்னியின் செல்வன்'
தீபாவளி வெளியீடுகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்துள்ள வசூல் விவரங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 21) சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் கார்த்தியின் சர்தார் படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் வெளியாகின.
இந்த நிலையில் இரண்டு படங்கள் மீதான மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. மற்றொருபுறம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்களிடையே ஆர்வம் குறையவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | 'இதயம் பலவீனமானவங்க இதைப் பார்க்காதீங்க' - ஷிவானியின் கவர்ச்சி படங்கள்
Advertisement
Advertisement
தீபாவளி வெளியிடுகளைத் தாண்டி நேற்று (அக்டோபர் 21) ஒருநாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் ரூ.2 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. துவக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் மக்கள் காட்டிய ஆர்வத்தினால் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இதனையடுத்து இரண்டாம் பாகத்துக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகிரித்துவருகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.