முகப்பு
செய்திகள்

சூர்யாவுடன் காந்தாரா நடிகை - வைரலாகும் புகைப்படம்

சூர்யாவுடன் காந்தாரா நடிகை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

Updated On : 22 அக்டோபர் 2022, 12:53 pm IST
பகிர்:

சூர்யாவுடன் காந்தாரா நடிகை இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

சூர்யாவுடன் எடுத்துககொண்ட படத்தை காந்தாரா பட நடிகை சப்தமி கௌடா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து சில நிமிடங்களுக்கு தனது இதயம் துடிக்காமல் நின்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பட நிகழ்வு ஒன்றில் இருவரும் கலந்துகொண்டபோது இந்தப் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.  மேலும் கேஜிஎஃப் நடிகர் யஷ் மற்றும் பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சப்தமி பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

சிறிய படமாக இருந்தாலும் சரி, ஒரு படம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அந்தப் பட நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் குவிவது வழக்கம். அந்த வகையில் காந்தாரா படத்துக்கு இந்திய அளவில் கிடைத்துள்ள கவனம் காரணமாக நடிகை சப்தமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments