சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், கேரளம் செல்வதால் சென்னையில் தேநீர் விருந்து இல்லை என்று மக்கள் மாளிகை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் நாளை (ஆக.15) கேரளம் செல்வதால் சென்னையில் தேநீர் விருந்து இல்லை என்று மக்கள் மாளிகை அறிவித்துள்ளது.
குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகவுள்ளது.
இந்தத் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுடைய முக்கிய பிரமுகர்கள் அதேபோல அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்களுக்கு மக்கள் மாளிகையிலிருந்து அழைப்பிதழ் வழங்கப்படும். சமீபகாலமாக சில அரசியல் காரணங்களுக்கான ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதும் வழக்கம்.
Advertisement
Advertisement
அதன்படி, நாளை (ஆக. 15) சுந்திர நாள் கொண்டாடப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றவிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், கேரளத்துக்கும் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். அவர் நாளை கேரளத்துக்குச் செல்லவிருப்பதால், சுதந்திர நாள் தேநீர் விருந்து நடைபெறாது என்று மக்கள் மாளிகை தரப்பிலிருந்து தகல்வகள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், ஆளுநர் நாளை இரவே கேரளத்திலிருந்து சென்னை திரும்பவிருக்கிறார். இதனால், வேறொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறுமா? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Raj Bhavan has announced that there will be no tea reception in Chennai, as the Governor (in-charge) of Tamil Nadu, R.V. Arlekar, is visiting Kerala tomorrow (August 15).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.