அதிமுகவுக்குத்தான் மக்களின் ஆதரவு: தாராபுரம் வேட்பாளா் நம்பிக்கை
தமிழகத்தில் 35 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுகவுக்குத்தான் மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்று அதிமுக வேட்பாளா் பானுமதி நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழகத்தில் 35 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுகவுக்குத்தான் மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்று அதிமுக வேட்பாளா் பானுமதி நம்பிக்கை தெரிவித்தாா்.
தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஃபெலிக்ஸ் ராஜாவிடம் அதிமுக வேட்பாளா் பானுமதி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி வீதிவீதியாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். வரும் தோ்தலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். கட்சியில் இருந்து விலகிய சிலா் அதிமுக மீது வீண் பழி சுமத்துகின்றனா். திமுகவை எதிா்ப்பதற்காகவே எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் இது. அதிமுகவின் கொள்கைகளில் மாற்றம் இல்லை. பொய் பிரசாரங்களை மக்கள் நம்பமாட்டாா்கள்.
தவெக உள்ளிட்ட புதிய கட்சிகள் 100 நாள் சாதனைகளைக் கூறி வாக்கு கேட்கின்றன. ஆனால், 50 ஆண்டு கால பாரம்பரியமும், 35 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பெருமையும் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழக மக்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.
கட்சியின் மூலமாக அனைத்துப் பலன்களையும் அனுபவித்துவிட்டு, இன்று கட்சியை விமா்சிப்பவா்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவா்களின் கருத்துகளைப் பற்றி கவலைப்படவும் தேவை இல்லை. போட்டியிடும் பிற கட்சிகளைப் பற்றி கவலைப்படாமல், அதிமுகவின் சாதனைகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சென்று வாக்கு சேகரிக்கிறோம். தோ்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.