பட்னா மக்கள் மாளிகை நோக்கிப் பேரணி: தேஜஸ்வி உள்பட ஆர்ஜேடி தொண்டர்கள் கைது!
ஆர்ஜேடி தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக...
பட்னா மக்கள் மாளிகை நோக்கிப் பேரணி நடத்திய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட அக்கட்சியின் தொண்டர்கள் புதன்கிழமையன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் தொடர்பான பிரச்னைகள், வேலையின்மை, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிராக பாட்னாவில் உள்ள மக்கள் மாளிகை (லோக் பவன்) நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், அக்கட்சியின் எம்.பி. மிசா பாரதி மற்றும் பல தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இந்தப் போராட்டத்தின்போது, தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, போராட்டக்காரர்கள் சிலர் பேருந்தின் மீது ஏறினர்.
கைது செய்யப்பட்ட பிறகு பேசிய தேஜஸ்வி யாதவ், அரசு இளைஞர்களைக் கண்டு அஞ்சுவதாகவும், மாணவர்கள், வேலையின்மை தொடர்பான பிரச்னைகளை ஆர்ஜேடி தொடர்ந்து எழுப்பும் என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய யாதவ்,
இளைஞர்களைக் கண்டு அரசு அஞ்சுகிறது. எந்த அரசும் நிரந்தரமானது அல்ல; ஒவ்வொரு அரசும் ஒரு நாள் பதவி விலகியே ஆக வேண்டும். எங்களுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம். சிறைக்குச் செல்ல நாங்கள் அஞ்சவில்லை. மாணவர்களின் உரிமைகள், வேலையின்மை ஒழிப்பு, வினாத்தாள் கசிவைத் தடுத்தல் மற்றும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம். என்று கூறினார்.
மாணவர்கள் தொடர்பான பிரச்னையை முன்னிறுத்தி, நாங்கள் மூவர்ணக் கொடியுடன் அமைதியான பேரணியை நடத்திக்கொண்டிருந்தோம் என்று அவர் கூறினார்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்ஜேடி எம்.பி. மிசா பாரதி கூறுகையில்,
பிகார் மாணவர்கள் சிறைக்குச் செல்லவும் தயாராக இருப்பதாகவும், ஆனால் சிவான் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்யப்படும் வரை தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருப்பார்கள். ஆர்ஜேடி, பிகார் மக்கள் பின்வாங்க மாட்டார்கள். ஒருவேளை இன்னும் சில நாள்களில் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அரசு உத்தரவிடலாம்.
சிவானில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது ஏகே-47 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது தொடர்பான சர்ச்சை நிலவும் சூழலில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் சிக்கிக்கொண்ட காவலர் ஒருவர், காற்றில் நான்கு முறை ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் துப்பாக்கிச் சூட்டினால் எந்தப் போராட்டக்காரரும் காயமடையவில்லை என்றும் பிகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.