FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

'சர்தார்' இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - வெளியான விடியோ

சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 26 அக்டோபர் 2022, 2:52 pm IST
பகிர்:

சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம்.

Advertisement

Advertisement

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் விடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி  கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments