இந்த குட்டி பொண்ணு சமீபத்தில் ஹிட்டான படத்தின் நாயகி - யாரென்று தெரிகிறதா?
குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள படத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் ஷோபனா என்ற வேடத்தில் கலக்கினார் நித்யா மேனன். 'ஷோபனா மாதிரி நமக்கு ஒரு தோழி இல்லையே' என இளைஞர்களை ஏங்க வைத்தது அவரது நடிப்பு.
இதையும் படிக்க | சமந்தாவுக்கு என்ன ஆனது ? சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல்
Advertisement
Advertisement
நடிகை நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக ஹனுமான் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை தபுவுடன் அவர் நடித்துள்ள காட்சிகளை விடியோவாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த விடியோவை பார்த்த பலருக்கும் 'உண்மையில் இது நித்யா மேனனா' என ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 'வெப்பம்' படத்தின் மூலம் நித்யா மேனன் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் மழை வரும் அறிகுறி பாடலையும், நித்யா மேனன் தனது பெரிய கண்களால் கொடுக்கும் ரியாக்சன்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மேலும் 'மெர்சல்', 'ஓகே கண்மணி' போன்ற சில படங்களில் நித்யா மேனன் நடித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.