மாவீரன் வெளியீடு எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மாவீரன் வெளியீட்டுத் தேதியை வீடியோ வெளியிட்டு, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
மாவீரன் வெளியீட்டுத் தேதியை வீடியோ வெளியிட்டு, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இந்நிலையில் மாவீரன் திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சிறப்பு விடியோவை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.