செய்திகள்

சினிமா நபர்கள் குறித்த எனது பார்வையை மாற்றியவர் தமன்னா: விஜய் வர்மா

 பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா தமன்னாவை ஏன் காதலித்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

DIN

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். 

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ,போலா ஷங்கர், ஜெயிலர் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. 

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் நடிகை தமன்னா அதை உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து விஜய் வர்மா, “நான் சினிமா சம்பந்தப்பட்டவர்களை டேட்டிங் செய்யக்கூடாதென இருந்தேன். ஏனெனில் சினிமா ஆள்களை நினைத்து கோபமாக இருந்தேன். ஒரே தொழில் செய்பவர்களுக்கு அதன் விளையாட்டு, பணம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தெரியும். அது ஒரு மாதிரி இருக்குமென நினைத்திருந்தேன். ஆனால் தமன்னாவை சந்தித்தப் பிறகு எனது பார்வையே மாறியதே. தமன்னாவின் அனுபவமும் நல்லது செய்கிற குணமும் சரியாக கணிக்கிற ஆற்றலும் எனக்கு மிகவும் உதவியது. பல விஷயங்கள் குறித்து எனக்கு புதிய புரிதல்களை கொடுத்தார் தமன்னா. நான் எதையாவது நினைத்து கவலை கொண்டிருக்கும்போது தமன்னா அது குறித்து புதிய புரிதல்களை அளிப்பார்” எனக் கூறியுள்ளார். 

தற்போது விஜய் வர்மா ஆப்கானி ஸ்னோ, மர்டர் முபாரக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமன்னா பந்த்ரா, வேதா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.  ஆக்ரி சச் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரியில் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்தினால்தான் விவசாயம் செழிக்கும்! - செளமியா அன்புமணி

மணிப்பூா்: இரண்டு நாள்களுக்குப் பின் இயல்புநிலை திரும்பியது

தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!பேச்சுவாா்த்தையில் உடன்பாடு!

‘புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி நல்லாட்சி தந்துள்ளது’

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு நிதியுதவி: நடிகா் பாா்த்திபன்

SCROLL FOR NEXT