ஓடிடியில் வெளியானது ‘வாரிசு’
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அனுஷ்காவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..
குறிப்பாக, இப்படம் ரூ.300 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
மேலும், அமேசான் பிரைம் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாகிறது.