செய்திகள்

வாரிசு டிரைலர்: மீம்ஸ், கிண்டல்களுக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பதில்! 

DIN

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.  வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரசுடு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். 

ஏற்கெனவே வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சீரியல் மாதிரி இருக்கிறது, பல தெலுங்கு படங்களின் சாயல் இருக்கிறதென விமர்சனங்கள் வந்தது. தெலுங்கில் காலம் தாழ்த்தி ரிலீஸானால் படம் வசூலிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியதாவது:

மொத்தமாக பார்க்கும் போது படம் எப்படி இருக்கும் என்பதே முக்கியம். டிரைலர் படத்தின் வசூலை முடிவு செய்வதில்லை. டிரைலர் டிரைலர்தான். 2 மணி நேரம் 40 நிமிடத்தில் மக்களை சிரிக்க வைக்கிறோம், அழுக வைக்கிறோம். அதனால் டிரைலரை வைத்து முடிவு செய்ய முடியாது. படம் மக்களை கனென்க்ட் செய்ய வேண்டும். வாரிசு இதைக் கண்டிப்பாக செய்யும். வழக்கமான குடும்ப படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை கூறியுள்ளோம். 

காந்தாரா, லவ் டுடே மாதிரி படங்கள் காலம் தாழ்த்தி ரிலீஸானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படமும் தெலுங்கில் காலம் தாழ்த்தி ரிலீஸானாலும் பிரச்னையில்லை. மக்களுக்குப் பிடிக்கும், நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழா

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 53 புள்ளிகள் சரிவு!

பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் தனித்து வெற்றி பெறும்: சுதாகா் ரெட்டி நம்பிக்கை

தேனீ வளா்ப்பு: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

பூதப்பாடியில் ரூ.17.38 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

SCROLL FOR NEXT