FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பான் இந்திய நடிகராக வேண்டும்: எஸ்.ஜே. சூர்யா விருப்பம்! 

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தான் இந்திய அளவில் நடிகராக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். 

Updated On : 13 ஜூன் 2023, 7:03 pm IST
பகிர்:

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்ஜர் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ளார். 

2021இல் சிம்புவுடன் நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 

Advertisement

Advertisement

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை' திரைப்படம் ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில்  கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அடுத்து விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்திலும் நடித்து முடித்துள்ளார். 

இயக்குநராக பாராட்டுகளை பெற்ற எஸ்.ஜே. சூர்யா தற்போது நடிகராக உயர வேண்டுமென தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பொம்மை படத்தினை முன்னிட்டு அவர் அளித்ட்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: 

கே.ஜி.எஃப்., பாகுபலி படங்களுக்கு முன்பே நான் பான் இந்தியா பற்றி யோசித்துள்ளேன். துணை இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே இந்தியா முழுவதும் நமது படங்கள் போக வேண்டுமென நினைத்துள்ளேன். இயக்குநராக சென்றுவிட்டேன். தற்போது பான் இந்தியா நடிகராக செல்ல வேண்டுமென்பதே எனது ஆசை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments