‘அன்றே கணித்த செல்வராகவன்’- வைரலாகும் ரசிகரின் ட்வீட்!
மயக்கம் என்ன படத்தை இயக்கிய இயக்குநர் செல்வராகவனுக்கு ரசிகரின் சுவாரசியமான ட்வீட் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படம் 2011இல் வெளியானது. இதில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்தனர். ராம்ஜி ஒளிப்பதிவில் ஜி.வி. இசையமைத்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிடித்த படமாக மாறியது. குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதில் புகைப்பட ஆர்வலராக இருக்கும் தனுஷ் முதலில் மூத்த புகைப்பட கலைஞரால் ஏமாற்றப்பட்டு பின்னர் கடைசியில் சிறந்த புகைப்படத்திற்கான் விருதினை வாங்குவார்.
இதையும் படிக்க: ‘குடும்பங்கள் கொண்டாடும் படமாக...’- சாகுந்தலம் படம் பார்த்து நடிகை சமந்தா நெகிழ்ச்சி!
Advertisement
யாமினி மாதிரி மாதிரி மனைவி வரவேண்டுமென பல இளைஞர்கள் அந்த நேரத்தில் புகழ்பெற்ற வசனங்களில் ஒன்று. இந்தப் படத்தில் புகைப்பட ஆர்வலரான தனுஷின் பெயர் கார்த்திக். இதே பெயரில் தற்போதுநேஷனல் ஜியாக்ரபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்ற கார்த்திக் சுப்பிரமணியத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இதைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர் இயக்குநர் செல்வராகவனை டேக் செய்து, “தலைவன் செல்வராகவன் மயக்கமென்ன படத்தில் ஹீரோவிற்கு இந்த பெயரை வைத்திருப்பார்” என பதிவிட்டு இருந்தார். உடன் நெருப்பு எமோஜிக்களும் கைக்கூப்பி வணங்கும் எமோஜிக்களும் இருந்தது. இந்த ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் லைக் செய்துள்ளார்.