முகப்பு
செய்திகள்

சீதா ராமன் தொடரில் இருந்து விலகும் பிரியங்கா!

சீதா ராமன் தொடரில் இருந்து நடிகை பிரியங்கா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Updated On : 17 மே 2023, 1:53 pm IST
பகிர்:

சீதா ராமன் தொடரில் இருந்து நடிகை பிரியங்கா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் நடிகை பிரியங்கா நல்காரி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சீதா ராமன்’ தொடரிலில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை பிரியங்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “விடைபெறுகிறேன் என்று கூறுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. சீதா கதாபாத்திரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நான் சீதையாக இருந்த நேரத்திற்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு இவ்வளவு அன்பைக் கொட்டியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணத்தின் மூலம் நிறைய  பாடங்களைக் கற்றுக்கொண்டேன், தனிப்பட்ட முறையில் நான் வளர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன், அதற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

முன்னதாக, பிரியங்கா 2010 இல் வெளியான 'அந்தரி பந்துவாயா' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். பின்னர் 'தீய வேலை செய்யணும் குமாரு,' 'சம்திங் சம்திங்,' மற்றும் 'காஞ்சனா 3' போன்ற படங்களில் நடித்தார். 

சின்னத் திரையில் 'ரோஜா'  தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர், அவர் சீதா ராமன் தொடரில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.