சித்தா: ஓடிடி அறிவிப்பு!
சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | அதிர்ஷ்டமும் இல்லை, அறிவும் இல்லை: ஜப்பான் படத் தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க | தீபாவளியைக் கைப்பற்றியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்? திரை விமர்சனம்
இந்நிலையில், இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் நவ.17ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.