FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழில் உருவாகவுள்ள விஜய் தேவரகொண்டாவின் தம்பி படம்!

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

Updated On : 22 அக்டோபர் 2023, 11:53 am IST
கோப்புப்படம்
பகிர்:

இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘பேபி’. 

காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்ப்டத்தில் வைஷ்ணவி சைதன்யா நாயகியாக நடித்திருந்தார். நாகேந்திரபாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். 

ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து வெற்றியடைந்தது.

Advertisement

Advertisement

விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதனையடுத்து இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வந்தன. 

இந்நிலையில் பேபி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர் ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments