வெங்கட் பிரபு - சினேகாவின் ஷாட் பூட் த்ரீ: டிரைலர் வெளியானது!
வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிப்பில் உருவாகியுள்ள ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு மற்றும் சினேகா நடிப்பில் உருவாகியுள்ள ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக கஸ்டடி படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து அவர் இயக்கவுள்ள விஜய் 68 படப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தற்போது ஷாட் பூட் த்ரீ என்ற படத்தில் நடிகை சினேகாவுடன் நடித்துள்ளார். இப்படம் கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் யோகிபாபு, பூவையார், கைலாஷ் ஹீட், பிரிணித்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
ராஜேஷ் வைத்யா இசையமைத்து இருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் அக்.6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: எமி ஜாக்சனா இது?
இந்த நிலையில், ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.