விரைவில் நிறைவடைகிறது... டிஆர்பியில் கலக்கிய முக்கிய சீரியல்!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தரி தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார்.
இதையும் படிக்க: தமன்னாவைப்போல் மாறிய எதிர்நீச்சல் நாயகி மதுமிதா! ரசிகர்கள் பகிரும் விடியோ!!
Advertisement
கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையாக சுந்தரி தொடர் உள்ளது.
இதனிடையே, விரைவில் ஐஏஎஸ் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியராக சுந்தரி(கேப்ரியல்லா) பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஐமேக்ஸ் தரத்தில் லியோ!
டிஆர்பியில் டாப் 5 இடங்களை பிடித்த சுந்தரி தொடர் நிறையவடையவுள்ளதால், அந்த தொடரை பார்க்கும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.