விஜய் 68: கதாநாயகியாக ஜோதிகா?
நடிகர் விஜய்யுடன் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமான நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளன்று புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் நடித்த ‘உடன்பிறப்பு’ படம் வெளியானது. ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடிக்க ஜோதிகாவிடம் கால்சீட் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
2000இல் குஷி, 2003இல் திருமலை ஆகிய வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால் 20 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா-விஜய் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும். இது உண்மையாக வேண்டுமென ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.