தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்து...

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைமைக் கொறடா கொடிகுன்னில் சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்காக மக்களவை நாளை (நவ. 30) கூடுகிறது. இந்த அமர்வில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களவையில் நவ. 30, டிச. 1, மாநிலங்களவையில் டிச. 2, 3 என நான்கு நாள்கள் அலுவல்கள் நடைபெறவுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை அவைக்கு வருகை தந்து, கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அந்தக் கட்சியின் தலைமைக் கொறடா கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக அறிவித்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.கே. சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து திமுகவின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.