ஆவடியில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்!
ஆவடியில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

ஆவடி: ஆவடியில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் எல். அம்பிகா ஜெயின் தொடக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
ஆவடி மாநகராட்சி 33-ஆவது வார்டு பருத்திப்பட்டு நாராயணபுரம் குடியிருப்பில் மனைப்பிரிவு பூங்கா அமைந்துள்ளது.
இங்கு பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் 800 சதுர மீட்டர் பரப்பளவில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
அதற்கான முதல்கட்ட பணிகளை ஆவடி மாநகராட்சி ஆணையர் எல். அம்பிகா ஜெயின், தொடக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், அங்கு பல்வேறு வகையான பூச்செடிகள், காற்றை சுத்திகரித்து, சுற்றுப்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகை மரக்கன்றுகள் உள்பட 800-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.
இந்தப் பணிகள் 4 நாள்கள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.