FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

படத்தின் வெற்றிக்கு பிரியங்கா சோப்ரா கடிதம்: இயக்குநர் நெகிழ்ச்சி!  

ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுவரும் 'கடார் 2' திரைப்படத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Updated On : 22 ஆகஸ்ட் 2023, 6:36 pm IST
பகிர்:

கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் கால் பதித்த அவர் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார். 2018-இல் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

ஹிந்தியில் 2003இல் இயக்குநர் அனில் சர்மா இயக்கத்தில் ‘தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் ஸ்பை’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் பட இயக்குநரின் கடார் 2 ஆக.11இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சன்னி தியோல், அமீஷா படேல், உத்கர்சா சர்மா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் இதுவரை ரூ. 388.60 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement

இந்த வெற்றிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து இயக்குநர் அனில் சர்மாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “இயக்குநர் அனில் சார், கடார்2 படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். வருங்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள். மிக்க அன்புடன் பிரியங்கா மற்றும் நிக்” என எழுதப்பட்டுள்ளது. 

பூங்கொத்து மற்றும் இந்தக் கடித்ததினை இயக்குநர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். 

பிரியங்கா சோப்ராவின் சிட்டாடல் இணையத்தொடர் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் எனும் ஆங்கிலப் படத்திலும் சிட்டாடல் 2 தொடரிலும் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments