சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா?
ஷாருக்கானின் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானின் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | லியோ இசை வெளியீட்டு விழா: சிறப்பு விருந்தினர் கமல்?
அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுநாள்(ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள தனியார் கல்லூர் ஒன்றில் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் துபையில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.