முகப்பு
செய்திகள்

தனி ஒருவன் - 2: இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனி ஒருவன் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட் 2023, 11:36 am IST
பகிர்:

தனி ஒருவன் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்றுடன் தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தனி ஒருவன் படத்தின் 2 ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

சென்னை தி நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இன்று மாலை தனி ஒருவன் படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அப்போது 2-ஆம் பாகம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments