முகப்பு
செய்திகள்

இந்தியன் - 2 படப்பிடிப்பில் பிரபல நடிகை ..

இந்தியன் - 2 படப்பிடிப்பில் பிரபல நடிகை கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி 2023, 3:21 pm IST
பகிர்:

இந்தியன் - 2 படப்பிடிப்பில் பிரபல நடிகை கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியன் - 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இதில்  கடந்த சில நாள்களாக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று படத்தின் நாயகியான காஜல் அகர்வால்  இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments