இளையராஜா இசையில் ‘விடுதலை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது 'துணிவு’
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.விடுதலை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கின. இதில் தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுக்கும் பணிகளில் நடிகர் விஜய் சேதுபதி ஈடுபட்டார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: '40 வயசு ஆகப்போகுதுன்னு பயமா இருக்கு..’: தனுஷ்
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் சுகா எழுதியுள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.