இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் உடற்பயிற்சி விடியோ!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
இதையும் படிக்க: ‘லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன?’- நயன்தாராவை மீண்டும் சீண்டிய மாளவிகா!
Advertisement
Advertisement
நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த ‘மாவீரன்’ பட விடியோ!
இந்நிலையில், கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்துள்ளார்கள். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.