’லியோ எதிர்பார்ப்புகளை விட பெரிதாக இருக்கும்...’: பிரபல இயக்குநர்
விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்ப்புகளை விட பெரிதாக இருக்கும் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்ப்புகளை விட பெரிதாக இருக்கும் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பழனி மலைக்கோயிலில் சமந்தா வேண்டுதல்
தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை - வசனத்தில் பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமாரிடம் ‘லியோ’ குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு, அவர் ‘உங்கள் எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துக்கொள்ளுங்கள். படம் அதைவிடப் பெரிதாக இருக்கும்’ எனப் பதிலளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.