‘மைக்கேல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான மைக்கேல் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. மேக்கிங் நன்றாக இருந்தாலும் எழுத்தில் கோட்டை விட்டத்தாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தப் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் பிப்.24ஆம் தேதி வெளியாக உள்ளதை படக்குழு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.