‘அரபிக்குத்து’ பாடல் புதிய சாதனை: புதிய விடியோ வெளியிட்ட படக்குழு!
நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது.
இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின.
இதையும் படிக்க: ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ‘துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்!
அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். இந்தப் பாடலுக்க ரௌடி பேபி, புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் அமைந்த ஜானி அரபிக் குத்து பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த நிலையில் இந்தப் பாடல் யூடியூபில் 500 மில்லியன் (50 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை பார்த்திராத அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து ஆடிய விடியோவும் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.