‘விஜய் 67’: லோகேஷ் கனகராஜ் கூறிய முக்கிய அப்டேட்!
‘விஜய் 67’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
‘விஜய் 67’ படம் குறித்து முக்கிய அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.
லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.
இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்கேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது விஜய் 67 குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிப்ரவரி 1,பிப்ரவரி 2, பிப்ரவரி 3 இந்த மூன்று தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்டேட் வருகிறது எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.