முகப்பு
செய்திகள்

6 மாதங்களில் 125 நாள்கள்: லியோ படப்பிடிப்பு நிறைவு! 

லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

Updated On : 15 ஜூலை 2023, 10:29 am IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

Advertisement

இதையும் படிக்க | வெளியானது அநீதி டிரைலர்

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருந்து வருகின்றன.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்த நிலையில் நேற்றிரவு படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 6 மாதங்களில் 125 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். தங்களது ஆன்மாவை படத்திற்காக ஒப்படைத்த படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணம் மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. உதவி இயக்குநர்களை நினைத்து பெருமையாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.