கங்குவா என்றால் என்ன? ரிலீஸ் எப்போது?: பதிலளித்த இயக்குநர் சிறுத்தை சிவா!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குநர் சிறுத்தை சிவா பேசியுள்ளார்.
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: வார இறுதியில் சம்பவம்: 96 பட நாயகியின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!
Advertisement
Advertisement
மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: வைரல் விடியோ!
இன்று நள்ளிரவு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டனர். வித்தியாசமான கதைப் பின்னணியில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவா, “கங்கு என்றால் நெருப்பு. கங்குவா என்பது நெருப்பின் மகன் என்பதுபோல பொருள். படத்திற்காக சூர்யா தனது 100 சதவிகிதத்தை கொடுத்துள்ளார். காடுகளின் உள்ளே நடந்து என்று படப்பிடிப்பு நடத்தினோம். படமும் சிறப்பாக உருவாகி வருகிறது. இது நிஜக் கதை கிடையாது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக கற்பனையில் உருவாக்கி இருக்கிறேன். 2024இல் முதலிலே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.