கவனம் ஈர்க்கும் ஷாருக்கானின் டன்கி டீசர்!
ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷாருக்கான் நடிக்கும் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
கலவையான விமரிசனங்கள் பெற்றாலும் உலகளவில் ரூ.1200 கோடியை வசூலித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஜவான் திரைப்படம்.
Advertisement
Advertisement
பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: என் அமைச்சரவையில் லோகேஷ்க்கு இந்தத் துறையைத் தருகிறேன்: விஜய்
இந்த நிலையில், ஷாருக்கானின் 58வது பிறந்த நாளையொட்டி, டன்கி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஷாருக்கானின் பதான், ஜவான் படங்களைத் தொடர்ந்து, டன்கி திரைப்படமும் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.