விஜய் 68: தயாரிப்பாளரின் புதிய அப்டேட்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 68’ படத்தின் அப்டேட்டினை கூறியுள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
Advertisement
Advertisement
வெங்கட்பிரபு பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மேதை வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பித்துபிடிக்கும் பல படப்பிடிப்பு நாள்கள் இருக்கின்றன தளபதி 68 படத்துக்காக. (அப்டேட்: தாய்லாந்தில் நேற்றைய இரவு முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. பிறந்தநாள் என்பதால் வெங்கட்பிரபுக்கு இன்று விடுமுறை)” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ‘தீர விசாரிப்பதே மெய்’: கமலை வாழ்த்திய பிரதீப் ஆண்டனி!
கேட்காமலே அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு மிக்க நன்றி என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.