முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் கதையை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 நவம்பர், 2023 at 3:15 PM
பகிர்:

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக முக்கியமான படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். 

இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. 

Advertisement

இந்நிலையில், உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் மோதிக்கொண்டிருக்கும் இந்திய, நியூசி ஆட்டத்தின்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்ட கேள்வி ஒன்றிற்கு, அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

இது, இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் கிரிக்கெட் விளையாட செல்லும் கதையாக உருவாக உள்ளதாகக் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.