விஜய் - 68 படத்தின் பெயர் அறிவிப்பு எப்போது?
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் விஜய் - 68 படத்தின் பெயர் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: 67 வயதில் 10-ம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் நடிகர்!
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
Advertisement
Advertisement
தாய்லாந்தில் வெங்கட்பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கபடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இப்படத்திற்கு சிஎஸ்கே என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.