விஜய் - 68 நடிகர்கள் இவர்கள் தானா?
விஜய்யின் 68வது படத்தின் நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை நேற்று எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. விஜயதசமி அன்று பூஜை புகைப்படங்கள் மற்றும் விடியோவுடன் கூடிய அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.
இதையும் படிக்க: திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்
Advertisement
Advertisement
அதிநவீன தொழில்நுட்பமான ஏஐ மூலம் விஜய் இளமையாக தோன்றும் பாடல்காட்சி படமாக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.