தேசிய விருது விழா: விருதைப் பெற்றார் மணிகண்டன்!
கடைசி விவசாயி திரைப்படத்திற்காக இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.
மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு அளிக்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழின் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியிருந்தது. அதற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து படத்தின் இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.
இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுனும் நடிகைக்கான விருதை ஆலியா பட்டும் பெற்றுக்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.